search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் எரித்து கொலை"

    ஆத்தூர் அருகே 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூரில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் ஆத்தூர் நகர போலீஸ்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே ஆத்தூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  உடலை மீட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் எரிக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு நிர்வான நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?  என்ற தெரியவில்லை.

    இதனால் அந்த பகுதியில் மாயமானவர்களின் பட்டியலை தயார் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும்  அவரை எரித்து கொன்று உடலை அங்கு வீசி சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக எரித்து கொன்றனர்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். 
    தொட்டியம் திருநாராயணபுரம் காவிரி கரையில் அடையாளம் தெரியாத ஆண் எரித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம்தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் காவிரியாற்று படுகைக்கு சென்ற சிலர் அப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக தொட்டியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பச்சைநிறபனியனும், வெள்ளை வேட்டியும்  பாதி எரிந்த நிலையில் கிடந்தார். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை யாரும் கடத்தி வந்து கொலை செய்து எரித்தார்களா? அல்லது வேறு எங்கும் கொலை செய்து இங்கு வந்து எரித்தார்களா? அல்லது மது போதை தகராறில் எரித்து கொல்லப்பட்டார? என பல கோணங்களில் தொட்டியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியிலிருந்து மோப்ப நாய் அர்ஜீன் வரவழைக்கப்பட்டது. அது சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்று காட்டுப்புத்தூர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் முன்பு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இந்த சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×